DD Second Marriage Details

விஜய் டிவி தொகுப்பாளினி ஆன டிடி இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

DD Second Marriage Details : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பங்கேற்றவர் திவ்யதர்ஷினி. இவர் எங்கிட்ட மோதாதே என்றதொகுப்பாளினியாக தற்போது பங்கு கொண்டு வந்தார்.

மேலும் இவர் சூப்பர் சிங்கர் ஜோடி நம்பர் 1 பாய்ஸ் வெர்சஸ் கேர்ள்ஸ் காபி வித் டிடி போன்ற நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக பங்கேற்று அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் ஆக இருந்தவர் டிடி.

பின்னர் இவரது நீண்ட கால நண்பரான ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் 2017 ஆம் ஆண்டு இருவருக்கும் விவாகரத்து நடந்தது.

இந்நிலையில் தற்போது டிடி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்யப்போவதாக வந்த தகவல் என்றும் கூறப்பட்டு வருகிறது.

இந்தத் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.