Anchor DD Interview
தீபாவளி ரேஸில் ரிலீசான படங்களில் தனக்கு பிடித்த படம் எது? என தொகுப்பாளர் டிடி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் பிகில் திரைப்படமும் கார்த்தியின் நடிப்பில் கைதி திரைப்படமும் தீபாவளி சரவெடியாக ரிலீசாகி வெற்றிநடை போட்டு வருகிறது.

இரண்டு படங்களுமே மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிடி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தீபாவளியில் ரிலீசான படங்களிலேயே எனக்கு பிடித்த திரைப்படம் விஜயின் துப்பாக்கி தான் என கூறியுள்ளார்.

விஜய் நடிப்பில் வெளியான மத்த படங்களை காட்டிலும் துப்பாக்கி எனக்கு மிகவும் பிடித்த படம் என கூறியுள்ளார். மேலும் இந்த வருட தீபாவளி ரிலீஸ் படங்கள் குறித்து கேட்டதற்கு இரண்டு படங்கள் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன். பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.