DD Movie

DD Movie : தன்னை விட 13 வயது சிறிய நடிகருக்கு ஜோடியாகியுள்ளார் டிடி. இது குறித்த தகவலை புகைப்படத்துடன் அவரே வெளியிட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் முன்னணி தொகுப்பாளியாக வலம் வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தற்போது வெள்ளித்திரையிலும் அடுத்தடுத்து படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்குவில் ஒரு படத்திலும் அறிமுகமாகியுள்ளார். அந்த படத்தை பிரபல முன்னணி இயக்குனரான பூரி ஜெகநாத் தான் இயக்குகிறார். ஹீரோவாக அவரது மகன் ஆகாஷ் நடிக்கிறார்.

இந்த படத்தின் நாயகி டிடி தான் என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால் அவரது டீவீட்டில் மை ஸ்வீட் ஹீரோ என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் டிடி ஹீரோயினியாக தான் நடிக்கிறாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி நடித்தால் தன்னை விட 13 வயது சிறிய நடிகருக்கு ஜோடியாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.