Divya Dharshini
இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் ரசிகர்களின் கேள்விக்கு DD பதிலளித்துள்ளார்.

DD Live Chat With Fans : தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளினியாகவும் திரைப்படங்களில் சிறு சிறு ரோல்களிலும் நடித்து வருபவர் DD என்கிற திவ்ய தர்ஷினி.

இவர் சமீபத்தில் இன்ஸ்டா பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் ரித்திக் ரோஷனுடன் டேட்டிங் சென்றதுண்டா? என கேட்டுள்ளார்.

விஜய் மகனுக்கு கதை ரெடி.. விஜயை வைத்து மாஸ் காட்டிய இயக்குனர் அதிரடி – அப்போ செம ஹிட் இருக்கு??

அதற்கு DD அவருக்கு ஓகே என்றால் எனக்கும் ஓகே தான். ஹன்ஷிகா தான் அவருடன் நட்பில் இருக்கிறார். அவர் சிபாரிசு செய்தால் இது நடக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு ரசிகர் எப்போது அம்மாவாக போகிறீர்கள் என கேட்க.. குழந்தை பெற்றால் தான் அம்மாவா? ஏன் அன்னை தெரசா இல்லையா என பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகர் உங்களுக்கு விவாகரத்து ஆகிடுச்சா என கேட்க, ஆம், விவகாரத்து ஆகி நான்கு வருடங்கள் ஆகி விட்டன எனவும் பதிலளித்துள்ளார்.