DD Husband Latest Photo

தொகுப்பாளினி டிவியின் கணவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

DD Husband Latest Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் நீண்ட காலமாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தன்னுடைய நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விஜய் டிவி இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்தது.

ஆனால் சில காரணங்களால் திருமணமான ஒரு வருடத்திலேயே தன்னுடைய கணவரை விவாகரத்து செய்து விட்டார் டிடி. அதன் பின்னர் அவருடைய கணவர் என்னவானார்? என யாருக்கும் தெரியாது.

இப்படியான நிலையில் தற்போது அவர் சாந்தனு உள்ளிட்ட பிரபலங்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.

டிடிக்கு விவாகரத்தாகி 3 வருடங்களுக்குப் பிறகு இந்த புகைப்படம் வெளியாகி இருப்பதால் இணையத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.