Poojai

எந்த கிழமையில் எந்த மலர்களை இறைவனுக்கு அணிவித்தால் சிறப்பு என்பதை அகத்திய முனிவர் அருளியதை தெரிந்துக் கொள்வோம்.

1 ஞாயிற்றுக்கிழமைகளில் :
தாமரை மலர் சமர்பித்து இறைவனை வணங்கினால், குடும்பத்தில் இருக்கும் மனசங்கடங்கள் நீங்கி, குடும்பத்துடன் சுபிக்ஷமாக இருப்பார்கள்.

2. திங்கள்கிழமைகளில் :
முல்லை, மல்லிகை போன்ற மலர்களை கொண்டு இறைவனுக்குப் பூஜை செய்தால், விரோதங்கள் மறையும் மனசங்கடங்கள் நீங்கும்.

3. செவ்வாய் கிழமைகளில் :
அரளி, கஸ்தூரி போன்ற சிகப்பு பூக்களை துர்கைக்கு அணிவித்தால் திருமண தடை விலகும். கணவன்- மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆயுள் விருத்தியாகும்.

4. புதன்கிழமைகளில் :
எல்லா மலர்களையும் சேர்த்து பூஜித்தால், நோய் நீங்கும். நல்ல பிள்ளைகள் பிறப்பார்கள். பிள்ளைகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

5. வியாழக் கிழமைகளில் :
சாமந்தி போன்ற மஞ்சள்நிற மலர்களை கொண்டு அர்ச்சித்தால், திருமணதடை நீங்கும். தடைபடும் செயல்கள் எளிதாக நடக்கும். தொழில் ஏற்றம் பெறும். குழந்தை பாக்கியம் அமையும்.

6. வெள்ளிக் கிழமைகளில் :
மல்லிகை மலர்களால் இறைவனை பூஜை செய்தால், வியாதிகள் நீங்கும். செல்வம் பெருகும். பிள்ளைகளுக்கு நன்மை உண்டாகும்.

7. சனிக்கிழமைகளில் :
மனோரஞ்சிதம் மலரால் தெய்வத்திற்கு அர்ச்சனை செய்தால், மன தைரியம் ஏற்படும். விரோதிகள் அழிவார்கள். நல்ல சிந்தனை உண்டாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here