Day Night Review
கெட்டவன் இயக்குனர் என்.கே கண்டி ( கெட்டவன் நந்து ) இயக்கத்தில் இன்று திரைக்கு வந்துள்ள திரைப்படம் டே நைட்.

Day Night Movie Review : 

படத்தின் கதைக்களம் :

படத்தின் நாயகி தன்னுடைய காதலனை தேடி ஆஸ்திரேலியா செல்கிறார். இருவரும் காதலித்து வரும் நிலையில் நாயகன் பிரச்சனை ஒன்றில் சிக்கி கொள்கிறார். அதன் பின்னர் அந்த பிரச்சனையில் சிக்கியுள்ளவர்கள் ஒவ்வொருவராக இறக்கின்றனர்.

எப்படியோ ஒரு வழியாக இப்பிரச்னையில் இருந்து தப்பித்து வெளியே வரும் சமயத்தில் படத்தின் நாயகியும் இறந்து விடுகிறார். இந்நிலையில் திடீரென ஹீரோவிற்கு ஒரு நாள் நாயகியிடம் இருந்து போன் வருகிறது.

அதன் பிறகு ஹீரோ நாயகியை தேடி செல்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? உண்மையில் நாயகி உயிருடன் தான் இருக்கிறாரா? இருவரும் சேர்ந்தார்களா? என்பது தான் இப்படத்தின் த்ரில்லிங்கான கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

படத்தின் நாயகனுக்கு இப்படம் அறிமுக படமா என்ற சந்தேகத்தை எழுப்பும் அளவிற்கு திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

நாயகி தன்னுடைய வேலையை சிறப்பாக செய்துள்ளார். படத்தின் இயக்குனர் என்.கே கண்டி சைக்கோ வில்லனாக மிரட்டியுள்ளார்.

தொழில்நுட்பம் :

இசை :

Arie Sen இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். பின்னணி இசையால் படத்திற்கு பலம் சேர்த்துள்ளார்.

ஒளிப்பதிவு :

ஒளிப்பதிவு தெளிவு

எடிட்டிங் :

AVS பிரேமின் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

என்.கே கண்டி வித்தியாசமான சைக்கோ திரில்லர் கதையை கையில் எடுத்து மட்டுமில்லாமல் அதையும் சிறப்பாகவும் கையாண்டுள்ளார். முதல் பாதியில் கொஞ்சம் பொறுமையை சோதித்தாலும் இரண்டாம் பாதியில் நம்மை சீட்டின் நுனியில் அமர வைத்து ரசிக்க வைக்கிறார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.