Tharshan Press Meet
சனம் ஷெட்டியின் குற்றச்சாட்டுக்கு தர்ஷன் பத்திரிகையாளர் சந்திப்பின் மூலமாக விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தர்ஷன். இவர் சனம் ஷெட்டியை காதலித்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இதனால் சனம் ஷெட்டி நேற்று போலீசில் தர்ஷன் நிச்சயம் செய்து விட்டு திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை ஏமாற்றுகிறார், அவருக்காக இதுவரை ரூ 15 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். பிக் பாஸ் வாய்ப்பு கிடைப்பதற்கும் நான் தான் காரணம் எனவும் கூறி இருந்தார்.

தற்போது தர்ஷன் என்னை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார், சந்தேகப்படுகிறார். அவர்களின் பெற்றோர்களும் எனக்கு எதிராக இருக்கின்றனர் என பேசி இருந்தார்.

இந்நிலையில் தற்போது தர்ஷன் சனம் ஷெட்டி எனக்கு உதவி செய்தது எல்லாம் உண்மை தான். எங்களுக்கு நிச்சயமும் நடந்தது. ஆனால் அவர் பிகினி உடையில் பேட்டி கொடுத்ததெல்லாம் எனக்கு பிடிக்கவில்லை. அவர் நான் நடிக்கும் படங்களில் என்னை ரெபர் செய் என டார்ச்சர் செய்து வந்தார்.

நான் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் மிரட்டி கொண்டிருந்தார். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. போத்தீஸ் விளம்பரம் மூலமாக தான் எனக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இது என்னுடைய தோழி ரம்யா ( 2-வது சீசன் போட்டியாளர் ) தெரியும்.

என்னுடைய அம்மாவை சனம் சந்தித்து பேசிய போது அவர் நீங்க ரெண்டு பேரும் காதலிக்கறீங்க என்றால் கல்யாணம் பண்ணிக்கோங்க என்று தான் சொன்னார். ஆனால் சனம் அதனை மாற்றி கூறுகிறார்.

நான் படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ள தயாரிப்பாளர்களிடம் அவன் என்னை ஏமாத்திட்டான், அவனை வைத்து எதுக்கு படம் எடுக்கறீங்க என்றெல்லாம் போய் சொல்லி கொண்டிருக்கிறார். அதனால் தான் அவரை பிரிய முடிவெடுத்தேன் எனவும் கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.