darshan
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ள தர்ஷன் அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த உருக்கமான கருத்தை தெரிவித்துள்ளார்.

Darshan express his feeling on fans support and love – பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார்.

இது பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களுக்கு மட்டுமில்லாமல், இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தர்ஷன் தெரிவித்துள்ளதாவது:

நம்மை பற்றி தெரிந்தவர்களிடமிருந்து அன்பை பெறுவது சாதரணதுதான். ஆனால், நாம் இதுவரை சந்திக்காதவர்களின் அன்பை பெறுவது ஒரு சிறந்த உணர்வு. இன்று வாழ்வின் மிகவும் சிறந்த நாள். என்னை பற்றி தெரியாதவர்களிடமிருந்து அன்பு, ஆதரவை பெற்றுள்ளேன். இதுதான் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நன்றி. இந்த 98 நாட்களாக உங்கள் குடும்ப உறுப்பினராக நினைத்து எனக்கு ஆதரவளித்த உங்களுக்கு நன்றி கூற என்னிடம் வார்த்தைகள் இல்லை. என் மனதிலும் நான் அன்பை உணர்கிறேன். உங்கள் அனைவரையும் விரைவில் சந்திப்பேன்’ என பதிவிட்டுள்ளார்.