darshan
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய தர்ஷன் ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Darshan emotional video about biggboss fans – பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் நேற்று தர்ஷன் வெளியேற்றப்பட்டார். இது பிக்பாஸ் வீட்டிலிருந்தவர்களுக்கு மட்டுமில்லாமல், இதுவரை இந்த நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டு வந்தவர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளியேற்றபட்ட தர்ஷன்.. கஸ்தூரி பதிவிட்ட ட்வீட் – என்ன சொல்கிறார் பாருங்க

இந்நிலையில், தர்ஷன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ‘ உங்களை ரசிகர்கள் எனக் கூற முடியாது. நீங்கள் என் குடும்பமாகி விட்டீர்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்த 17 பேருக்கும் ரசிகர்கள் இருந்தனர். ஆனால், எனக்கு குடும்பமே கிடைத்துள்ளது. நான் வெற்றி பெறாமல் போனது எனக்கு வருத்தமில்லை. இத்தனை குடும்பங்கள் எனக்கு கிடைத்ததிலேயே நான் வெற்றி பெற்றுவிட்டேன். தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 4 பேரில் உங்களுக்கு யாரை பிடிக்கிறதோ, யார் உண்மையிலேயே கடுமையாக உழைக்கிறார்களோ அவருக்கு வாக்களியுங்கள்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், உங்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்திக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். விரைவில் அது நடக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here