வருமானம் இன்றி வாடிய மீனவர் குடும்பத்தினருக்கு உதவி செய்துள்ளார் குக் வித் கோமாளி பிரபலம்.

Darsha Gupta Helps to Fishers Family : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்து வந்த நிலையில் தற்போது தான் ஓரளவுக்கு கட்டுக்குள் வர தொடங்கியுள்ளது.

இந்த வைரஸ் பரவல் காரணமாக தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.

அப்படி வருமானம் இன்றி தவித்து வரும் மீனவ குடும்பத்தினருக்காக குக் வித் கோமாளி பிரபலம் தர்ஷா குப்தா தன்னால் முடிந்த உதவிகளை செய்துள்ளார். அவர்களுக்குத்தான் உதவிய புகைப்படங்களை வெளியிட்டு நீங்களும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் உங்கள் சந்ததி வாழும் என கூறியுள்ளார்.

தர்ஷா குப்தாவின் இந்த உதவிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.