Darbar vs Thalapathy 63 clash  : 

இப்படத்தை பொங்கலுக்கு பதிலாக தீபாவளிக்கே வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

ஹிட் படத்தைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய சமந்தா – யார் செய்த வேலை இது?

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் பேட்டை படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நினைத்ததை விட இதன் படப்பிடிப்பு வேகமாக நடப்பதால் இப்படத்தை பொங்கலுக்கு பதிலாக தீபாவளிக்கே வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதாக ஒரு செய்தி வெளியாகி தீயாய் பரவியது.

ஆனால் படக்குழு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் படம் பொங்கலுக்குதான் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.