தர்பார் திரைப்படம் முதல் நாளில் ரூ 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தும் சர்கார் படத்தின் வசூலை மிஞ்ச முடியவில்லை.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தர்பார். முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ 2.27 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
ஆனால் இது முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தின் சென்னையின் முதல் நாள் வசூலை விட குறைவு தான்.
ஆம் சர்கார் திரைப்படம் சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ 2.37 கோடி வசூல் செய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.