சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அவருடைய மாப்பிள்ளை தனுஷிற்கு இடையே கடும் மோதல் நிலவி வருகிறது.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தில் இருந்து சும்மா கிழி என்ற பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. யு ட்யூப் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.
அதேபோல் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் படத்தில் இருந்து சில் ப்ரோ என்ற பாடல் வீடியோ நேற்று வெளியானது. தற்போது இந்த பாடல் யூ ட்யூபில் ட்ரெண்டிங்கில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.
இந்த இரண்டு பாடல்களுமே ட்ரெண்டிங்கில் கடும் போட்டி போட்டு வருகிறது. ரஜினிகாந்தின் தர்பார் பாடல் தொடர்ந்து முதலிடத்தை பிடிக்குமா? அல்லது தனுஷின் பாடலால் பின்னுக்கு தள்ளப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.