Darbar Updates
Darbar Updates

Darbar Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

தர்பாரில் பாட்டெழுதும் பிரபல இயக்குநர் – உண்மைத் தகவல் என்ன தெரியுமா?

இந்நிலையில் இன்று இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இது ஒருபக்கம் இருக்க படப்பிடிப்பில் இருந்து ரஜினி, நயன்தாரா பங்கேற்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் இப்படத்தில் ரஜினி மற்றும் நயன்தாராவின் கெட்டப்பும் தெரிய வந்துள்ளது.

ரஜினி பேட்ட பாணியில் கருநிற தாடியுடனும் நயன்தாரா புடவை, பூவுடனும் காட்சியளிக்கின்றனர்.

இதைதொடர்ந்து அவள் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் நயன்தாரா.

இந்த படத்தின் படப்பிடிப்பு தர்பார் முடிந்த கையோடு அடுத்த மாத இறுதியில் துவங்குகிறதாம்.

இப்படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.