Darbar Updates
Darbar Updates

Darbar Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

திடீரென ரஜினியை சந்தித்த விக்னேஷ் சிவன் – எதனால் தெரியுமா?

மேலும் அண்மையில் இதன் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்துகொண்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதன்பிறகு யோகி பாபுவும் இப்படத்தில் இணைந்தார்.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகர் பிரதீப் கப்ரா அண்மையில் இப்படத்தில் இணைந்துள்ளாராம். இவர் காலா படத்திலும் வில்லனின் அடியாளாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணியுடன் முதல்முறை ஒரு படம் – உருக்கமாக பதிவிட்ட கார்த்தி; புகைப்படம் உள்ளே!

ஏற்கனவே பிரதீக் பப்பர், ஜதின் ஷர்மா என சில பாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் தற்போது இவரும் இணைந்துள்ளார்.

மும்பையில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் நிறைய மும்பை நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.