Darbar Update
Darbar Update

Darbar Update – பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில்
துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் அண்மையில் ரஜினியை சந்தித்து அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

இதனால் விக்னேஷ் சிவன் இப்படத்தில் அனிருத்தின் இசையில் ஒரு பாடல் எழுதியிருப்பதாக ஒரு தகவல் வேகமாய் பரவத் துவங்கியது. ஆனால் விசாரித்தால் அதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

மேலும் தர்பார் படத்தையும் விக்னேஷ் சிவனின் அடுத்த படத்தையும் லைக்கா தயாரிப்பதால் அவர்கள் வாயிலாக ரஜினியை அவர் நட்பு ரீதியாக சந்திருக்க கூடும் என்று சொல்லப்படுகிறது.