பிகில் பட ட்ரைலர் சாதனையை தர்பார் பட ட்ரைலர் முறியடித்துள்ளது. ஆனால்? அங்க தான் ஒரு ட்விஸ்ட்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மொத்தம் மூன்று மொழிகளில் வெளியானது.
இந்த மூன்று மொழிகளிலும் சேர்த்து தர்பார் 20 மில்லியன் ஹிட்ஸை வெறும் 16 மணி நேரத்தில் பெற்று பிகில் ட்ரைலர் சாதனையை முறியடித்துள்ளது.
ஆனால் பிகில் பட ட்ரைலர் தமிழில் மட்டுமே 24 மணி நேரத்தில் 20 மில்லியன் ஹிட்ஸ் அடித்து இருந்தது.
தற்போது மூன்று மொழியை சேர்த்து தான் 20 மில்லியன் ஹிட்ஸை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.