Darbar Special
Darbar Special

Darbar Special – பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். ஏற்கனவே மூன்று முகம் படத்தின் அலெக்ஸ் பாண்டியன் கதாபாத்திரம் அவரது நடிப்பில் பென்ச் மார்க்காக உள்ள நிலையில் அதைவிட சிறப்பான மேனரிஸம் இப்படத்தில் இடம்பெற வேண்டும் என கடுமையாக உழைக்கிறாராம் ரஜினி.

வழக்கமாக தனது கதாபாத்திரங்களுக்கு ஹோம் வர்க் செய்வது ரஜினியின் வழக்கம். அந்தவகையில் இந்த கதாபாத்திரத்துக்கு வழக்கத்துக்கு மாறாக அதிக சிரமம் எடுத்து ஹோம் வர்க் செய்து வருகிறாராம்.

இதை கேள்விபட்டு அதனால்தான் அவர் இன்றும் சூப்பர் ஸ்டார் என திரையுலகினர் பாராட்டி வருகிறார்கள்.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் பேட்ட படத்தை தொடர்ந்து அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here