Darbar Special Update

Darbar Special Update : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பை சுற்று வட்டாரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தர்பாரில் ரஜினியின் மகள் இவர்தான் – வெளிவந்த உறுதியான தகவல் இதோ!

இதில் ரஜினி, நயன்தாரா, யோகி பாபு, நிவேதா தாமஸ் பங்கேற்கும் காட்சிகளை படக்குழு படமாக்கி வருகிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு பிரபலமும் பணியாற்றி வருகிறாராம். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் இப்படத்தில் நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறாராம்.

இவர் அஜித்தின் ஆரம்பம், என்னை அறிந்தால், வேதாளம் படங்களை தயாரித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.