Darbar Pooja

Darbar Shooting : மும்பையில் பூஜையுடன் தர்பார் படப்பிடிப்புகள் தொடங்கியுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்திருந்த பேட்ட திரைப்படத்தை அடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் இயக்கத்தில் உருவாக ஒப்பந்தமாகி இருந்தார்.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்திற்கு தர்பார் என டைட்டில் வைக்கப்பட்டு இருப்பதாக பர்ஸ்ட் லுக் போஸ்டருடன் நேற்று காலை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

தர்பார் பர்ஸ்ட் லுக்கும் காப்பியா? – வைரலாகும் ஒரிஜினல் லுக் போஸ்டர்.!

இந்த அறிவிப்பை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகள் இன்று தொடங்கும் எனவும் அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

அதன் படி தற்போது மும்பையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் பூஜையுடன் தொடங்கியுள்ளன. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.