Darbar Shooting
Darbar Shooting

Darbar Shooting : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.

அண்மையில் இதன் படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் நடைபெற்றது.

இதில் கல்லூரி மாணவர்களுக்கு நிறைய கெடுபிடிகள் விடுத்ததால் படப்பிடிப்பு தளத்தில் மாணவர்கள் ஒன்று திரண்டு கற்களை வீசி எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியானது.

ஆனால் அதை படக்குழு திட்டவட்டமாக மறுத்துள்ளனர். அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.