Darbar second schedule from May 29 : Sivakarthikeyan | Nayanthara | Yogi BABU | Darbar Movie Updates | Nivetha Thaamos | Kollywood

Darbar second schedule from May 29 :

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது. இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நிறைவுக்கு வந்திருப்பதாகவும் அதனால் ரஜினி சென்னை திரும்பியிருப்பதாகவும் நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம்.

மீண்டும் தள்ளிபோகும் சிந்துபாத் – இந்தமுறை எப்போது தெரியுமா?

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் அதாவது மே 29-ம் தேதி துவங்க உள்ளதாம். இதை படக்குழு அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளது.

ஏற்கனவே பிரதீக் பப்பர், ஜதின் ஷர்மா என சில பாலிவுட் நடிகர்கள் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில் அண்மையில் தலிப் தஹிலும் இதில் இணைந்துள்ளார்.

மும்பையில் நடக்கும் கதை என்பதால் இப்படத்தில் நிறைய மும்பை நடிகர்கள் நடிப்பார்கள் என சொல்லப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.