Darbar Second Day Collection
தர்பார் திரைப்படத்தின் வசூல் தமிழகத்தில் இரண்டாவது நாளிலேயே பாதியாக குறைந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 9-ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வந்திருந்த திரைப்படம் தர்பார்.

இந்த படம் முதல் நாளில் மட்டும் தமிழகம் முழுவதும் சேர்த்து ரூ 16.70 கோடி வசூல் செய்திருந்தது. ஆனால் இரண்டாவது நாளில் இந்த வசூல் பாதியாக குறைந்துள்ளது.

ஆம், நேற்று இப்படம் தமிழகத்தில் ரூ 7.40 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக பாக்ஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் படத்தின் வசூல் குறைந்திருக்கலாம், இன்றைய வசூல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

அதிகரிக்கிறதா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.