Darbar
தர்பார் படத்தின் ரன்னிங் டைம், ரிலீஸ் தேதி குறித்த விசயங்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான முருகதாஸ் முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தர்பார் படத்தை இயக்கியுள்ளார்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது,

அதே போல் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பட்டாஸ் திரைப்படமும் பொங்கல் ரிலீஸ் என கூறப்பட்டு வந்தது. ரஜினியும் தனுஷும் ஒரே நாளில் மோதில் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தங்களுக்குள் மோதல் வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.

இதனால் தர்பார் திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ம் தேதியும் பட்டாஸ் திரைப்படம் ஜனவரி 14-ம் தேதியும் வெளியாக உள்ளது.

மேலும் தர்பார் படத்தின் ரன்னிங் டைம் 2 மணி  நேரம் 37 நிமிடங்கள் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.