தர்பார் படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடித்துள்ளார். யோகி பாபு உட்பட பலர் இணைந்து நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருத்தது.
அதன் படி தற்போது ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை பிரம்மாண்ட கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதோ ட்ரைலர் வீடியோ உங்களுக்காக
Hi friends, the wait is finally over…???? Here you go, enjoy the #DarbarTrailer !! #DarbarThiruvizha@rajinikanth #Nayanthara @SunielVShetty @i_nivethathomas @santoshsivan @LycaProductions @anirudhofficial @sreekar_prasad @Shibasishsarkar @RelianceEnthttps://t.co/10EbPspaYe
— A.R.Murugadoss (@ARMurugadoss) December 16, 2019