Darbar Cast

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் “தர்பார்” . 2.0 எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார் . பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா , நவாப் ஷா , தலிப் தஹில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

அனிரூத் இசையில் இப்படத்திலிருந்து சும்மா கிழி எனும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீதமுள்ள பாடல்களுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது .

ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்ய சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் . கலை இயக்கம் T சந்தானம் , சண்டை பயிற்சி பீட்டர் ஹெயின்/ராம் – லக்ஷமன் . நடனம் பிருந்தா ,ஷோபி .

தம்பி ராமய்யா , ஸ்ரீமன் ஆகியோரெல்லாம் நடித்துள்ளார்கள் என்பது தற்போது தான் தெரிய வந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மேலும் இந்த படம் ஜனவரி 9-ம் தேதி முதல் திரைக்கு வரும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.