Darbar Movie Photos goes viral in social networks Darbar movie, Rajinikanth, A.R.Murugadas, Darbar Update, Tamil cinema, Rajini nice look
ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்பார்’ திரைப்பட படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Darbar Movie Photos : பேட்ட திரைப்படத்திற்கு பின் ரஜினி தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் அவர் காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்து வருகிறார். மற்றும் யோகிபாபு உட்பட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ஏறக்குறைய இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது.

கொளுத்தி போட்ட த்ரிஷா.. ட்விட்டரில் மோதி கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய நாள் முதலே படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் லீக் ஆகி வந்தது. இதுவரை 10க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வெளிவந்துவிட்டன.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் முருகதாஸும், ரஜினியும் பேசிக் கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.