Darbar Movie
Darbar Movie

Darbar Movie :  பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இதன் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. அதுவும் பொது இடங்களில் பெரும்வாரியான படப்பிடிப்பு நடைபெறுவதால் தினம் தினம் படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவேற்றி வருகின்றனர்.

இதில் ரஜினி, யோகி பாபு, நயன்தாராவின் கெட்டப் வெளியாவதோடு சில வீடியோக்களும் வெளியாவதால் படக்குழு அதிர்ச்சியில் உள்ளனர்.

தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி நடிகை நிவேதா தாமஸும் இதன் படப்பிடிப்பில் அண்மையில் இணைந்துள்ளாராம்.

பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்த நிவேதா தாமஸ் இப்படத்தில் ரஜினியின் மகளாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

என்னை கண்டதும் அஜித்? மேடையில் நடித்தே காட்டிய நடிகர் – விடியோவுடன் இதோ.!

இவர் ரஜினி, நயன்தாரா மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட காட்சிகளை தற்போது படக்குழு தீவிரமாக படமாக்கி வருகிறார்கள்

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.