Darbar Movie Updates
Darbar Movie Updates

Darbar Movie Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

காமெடி நடிகர் யோகி பாபுவும் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

உங்களுக்கு சர்க்கரை நோயா? உங்கள் பாதங்களை பாதுகாத்துக்கொள்ள, சில டிப்ஸ்!.

ரஜினி ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கும் இப்படத்தில் அவருடன் படம் முழுக்க வரும் ஒரு கான்ஸ்டபிள் கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

rajini

இதற்காக யோகி பாபு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

ஆனால் இந்த 40 நாட்களையும் அவர் தொடர்சியாக கொடுக்கவில்லையாம். மாறாக ஒரு வாரம் இந்த படத்திற்கு ஒருவாரம் விஜய் படத்திற்கு என பிரித்து கொடுத்துள்ளாராம்.

இதனால் யோகி பாபு வரும் வரை ரஜினி உட்பட மொத்த யூனிட்டும் காத்திருந்து அவருடைய போர்ஷனை படமாக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்.

வளர்ச்சி என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சொல்கிறது கோலிவுட்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.