Darbar Movie Updates :
Darbar Movie Updates :

Darbar Movie Updates : பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

சூப்பர் டீலக்ஸ் இயக்குனர் தன் மூஞ்சியில் காறித்துப்ப சொன்னார் – பிரபல நடிகை ஓபன் டாக்!

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

ஆனால் அவர் இப்படத்தில் ரஜினியின் ஜோடி இல்லையாம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியே இல்லையாம்.

தந்தை மகள் பாசத்தை மையமாக கொண்ட இப்படத்தில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிப்பார் எனவும் மேலும் நயன்தாரா இப்படத்தில் ரஜினிக்கு வில்லியாக அல்லது ஒரு முக்கியமான கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படம் முழுக்க வரும் கேரக்டர் என்பதால் இப்படத்துக்காக தொடர்ச்சியாக அறுபது நாட்கள் வரை நயன்தாரா கால்ஷீட் ஒதுக்கியுள்ளாராம்.

ஏற்கனவே சந்திரமுகி, சிவாஜி, குசேலன் ஆகிய படங்களில் ரஜினி – நயன்தாரா ஜோடி இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.