Darbar FL Secrets

Darbar FL Secrets : சூப்பர் ஸ்டாரின் தர்பார் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் குறித்த தகவலுடன் வெளியாகியுள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கவனிக்க வேண்டிய விசயங்கள் பல அடங்கியுள்ளன.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக இணைந்து நடிக்க உள்ள திரைப்படம் தர்பார்.

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பட்டய கிளப்பி வருகிறது.

இந்த போஸ்டரில் படம் 2020-ல் பொங்கல் ரிலீஸ் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் அடுத்த வருடமும் தலைவர் பொங்கலாகவே அமைய உள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தடையை நீக்குவதற்கு காரணமே மோடி தானாம்.!!

மேலும் ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் கசிந்திருந்தது. அவர் உண்மையில் போலீசாக தான் நடிக்கிறார் என்பது இந்த போஸ்டர் மூலம் தெள்ள தெளிவாகியுள்ளது.

போஸ்டரின் பின் புறத்தில் இதியாவின் நுழைவு வாயில் இடம் பெற்றுள்ளது. இதனால் இது டெல்லியை சார்ந்த கதையாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

Caution என்ற ரிப்பன் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம் பெற்றிருப்பதால் டெல்லியில் நடக்கும் ஒரு கொலையை வைத்து நகரும் கதையாக இருக்கும் என நம்மால் யூகிக்க முடிகிறது.

மேலும் பல சுவாரஷ்யமான தகவல்கள் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ஒளிந்து கொண்டுள்ளன. நீங்கள் புரிந்து கொண்ட விசயங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.