Darbar 5 day Collection
தர்பார் திரைப்படம் தமிழகம் முழுவதும் 4 நாளில் ரூ 150 கோடியை தாண்டியுள்ள நிலையில் 5-ம் நாள் வசூல் நிலவரம் பற்றி பார்ப்போம்.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்பார்.

பொங்கல் விருந்தாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. 4 நாளில் இப்படம் தமிழகத்தில் ரூ 150 கோடி வசூல் செய்திருந்தது.

ஐந்தாம் நாளான நேற்று சென்னையில் மட்டும் ரூ 80 லட்சம் வசூல் செய்திருந்தது. இதன் மூலமாக சென்னையில் 5 நாளில் இப்படம் ரூ 8 கோடியை வசூல் செய்துள்ளது.

இனி வரும் நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வசூல் அதிகரிக்கலாம், அல்லது பட்டாஸ் தர்பாரை விட சூப்பராக இருந்தால் வசூல் குறையும் அபாயமும் உள்ளது.

என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.