Darbar Movie
4 நாள் முடிவில் சென்னையில் தர்பார் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தர்பார்.

நயன்தாரா, யோகி பாபு, சுனில் ஷெட்டி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த ஜனவரி 9-ம் தேதி ரிலீசானது.

முதல் நாளில் இப்படம் சென்னையில் ரூ 2 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இரண்டாவது நாளில் வசூல் பாதியாக குறைந்தது.

தற்போது நான்கு நாள் முடிவில் சென்னையில் மட்டும் ரூ 7.28 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இனி தொடர்விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகமாகும் என எதிர்பார்க்கலாம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.