Dandruff Problems & Solutions :
Dandruff Problems & Solutions

Dandruff Problems & Solutions :

பொடுகுத் தொல்லையால் அவதிப்படுபவர்களா நீங்கள்? இதோ பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட எளிமையான டிப்ஸ்கள்:

பொடுகு ஏற்பட காரணங்கள்:

* அதிகமான ஷாம்பு பயன்படுத்துதல்.

* மற்றவர்களின் சீப்புகளை பயன்படுத்துதல்.

* முறையாக தலையைத் தேய்த்துக் குளிக்காமல் இருத்தல்.

* மன அழுத்தத்தால் கூட பொடுகு ஏற்படலாம்.

* பிடிரோஸ்போரம் ஓவல் என்ற நுண்ணுயிரியால் கூட பொடுகு ஏற்படும்.

* எக்ஸிமா ,சோரியாசிஸ் போன்ற நோய்களால்பொடுகு ஏற்படும்.

பொடுகை நீக்க உதவும் இயற்கை மருத்துவ முறை:

1. கொழுப்பு சக்தி மிகுந்த நெய், பால் ,வெண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவை தலையில் எண்ணெய் பசைத் தன்மையை உடலில் தக்க வைத்துக் கொள்ள உதவும்.

2. சின்ன வெங்காயத்தை அரைத்து தலையில் 15 நிமிடம் ஊறவைத்து பிறகு தலை குளிக்கலாம்.

3. வேப்பிலை, துளசி இவற்றைச் சாறு எடுத்து, தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

4. வசம்பு தூளை ,தேங்காய் எண்ணெயில் கலந்து தலையில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

5. உப்பு போடாத வேப்பம் பூ 50gm தேங்காய் எண்ணெயை 100 gmகலந்து , அரை மணி நேரம் தேய்த்து, ஊற வைத்து பிறகு ,தலைக்கு குளித்தால் பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Advertisements

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here