Dance Master Robert Advice to Peter Paul
Dance Master Robert Advice to Peter Paul

வனிதாவின் மூன்றாவது கணவருக்கு அவரது முன்னாள் காதலர் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.

Dance Master Robert Advice to Peter Paul : தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை தொடர்ந்து குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டிலை வென்றார்.

அதன் பின்னர் தனக்கென யூடியூப் சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலேயே வனிதாவை பீட்டர் பால் மணந்து கொண்டார். இதனால் இவர்களுடைய திருமணம் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகிறது.

இஞ்சி இடுப்பழகியை அலேகா தூக்கிய விஜய் டிவி.. பிக் பாஸ் சீசன் 4ல் முதல் போட்டியாளர் இவர்தான்.?!

இந்த நிலையில் வனிதாவின் முன்னாள் காதலரும் டான்ஸ் மாஸ்டருமான ராபர்ட் மாஸ்டர் பேட்டி ஒன்றில் இவர்களின் திருமணம் குறித்து பேசியுள்ளார்.

அதாவது வனிதா குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் திருந்தி விட்டார் என்று தான் நினைத்தேன்.

அவர் உண்மையில் சிங்கம் பெண்ணாக இருந்திருந்தால் இந்த திருமணத்தை செய்திருக்க மாட்டார் என கிண்டலடித்துள்ளார். பீட்டர் பாலுக்கு நான் ஒரே ஒரு அட்வைஸ் மட்டும் கூறுகிறேன்.

அவர் அவருடைய முதல் மனைவியை முறையாக விவாகரத்து செய்து கொண்ட பின்னர் தான் வனிதாவை திருமணம் செய்திருக்க வேண்டும், அப்படி வாழ்வது தான் நல்லது என கூறியுள்ளார்.