Dance Master Robert About Eeswaran

ஈஸ்வரன் படத்தில் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி இருக்காது என அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்.

Dance Master Robert About Eeswaran : தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படங்களில் ஒன்று ஈஸ்வரன். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

இந்த படத்தின் டீஸர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவைகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இப்படத்தில் டான்ஸ் மாஸ்டராக ராபர்ட் பணியாற்றியுள்ளார்.

பொதுவாக ராபர்ட் மாஸ்டர் தனக்கு விருப்பமான நடிகர்களுடன் பணியாற்றும்போது அப்படத்தில் விதவிதமான ஸ்டெப்புகளை கற்றுக்கொடுத்து நடனத்தில் பட்டையை கிளப்புவார்.

ஆனால் ஈஸ்வரன் படத்தில் அப்படி வித்யாசமான டான்ஸ் எதுவும் இல்லை, சாதாரணமகத்தான் இருக்கும் என வெளிப்படையாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஈஸ்வரன் படத்தில் நிஜப் பாம்பு இடம்பெறவில்லை அது வெறும் ரப்பர் பாம்பு தான் என தெரிய வந்திருந்ததை தொடர்ந்து தற்போது பெரிய அளவில் டான்ஸ் எதுவும் இலலை என டான்ஸ் மாஸ்டரே கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.