Dalip Tahil talks about Darbar storyline : Rajinikanth | Nayanthara | Yogi Babu | Kollywood | Tamil Cinema | Darbar Trailer

Dalip Tahil talks about Darbar storyline :

தர்பாரில் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவருக்கு உதவும் ஒரு கேரக்டரில் தலிப் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படதை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

தர்பார் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் துவங்கியுள்ளது.

இப்படத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினி ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்.

தளபதி 64 படத்தில் ஏற்பட்ட அதிரடி மாற்றம் – என்ன தெரியுமா?

இதன் படப்பிடிப்பு அண்மையில் மும்பையில் நடைபெற்று வந்தது. இதில் ரஜினி, யோகி பாபு, நிவேதா தாமஸ், யோகிபாபு சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின்படி பிரபல பாலிவுட் நடிகர் தலிப் தஹில் அண்மையில் இப்படத்தில் இணைந்துள்ளாராம்.

தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!

இப்படம் குறித்து ஒரு பேட்டியில் பேசிய இவர், இப்படத்தில் ரஜினி மும்பையை சுத்தம் செய்யும் ஒரு போலீஸ் கேரக்டரில் நடித்து வருவதாகவும் அவருக்கு உதவும் ஒரு கேரக்டரில் இவர் நடித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இவர் இப்படி பேசியதால் ஒட்டுமொத்த படக்குழுவும் இவர் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாம்.