கொரானாவை ஒழித்துக்கட்ட திருநெல்வேலியில் கெத்தாக களமிறங்கியது அஜித்தின் தக்ஷா டீம்.

Daksha Team Work in Tirunelveli : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. தற்போது இந்தியாவில் இதன் இரண்டாவது அலை எதிர்பாராத அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.

கொரானாவை ஒழித்து கட்ட திருநெல்வேலியில் கெத்தாக களமிறங்கிய அஜித் டீம்.!!

இதனைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருநெல்வேலியில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் ‌‌ கிருமி நாசினி தெளித்து என்பது சவாலான விஷயமாக உள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் அதிரடியாக களம் இறங்கியுள்ளது தல அஜித்தின் தக்ஷா டீம். அஜித் தலைமையிலான இந்தக் குழு உருவாக்கிய ட்ரோன் மூலம் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கிருமிநாசினி தெளிக்க பயன்படுத்தப்பட உள்ளது. இது குறித்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.