Dada 87 Director Vijay Sri :

தாதா87 இயக்குனர் விஜய் ஸ்ரீ பேசும் போதே நம்புறாமாதிரி பேசுகிறவர்களைப் பார்த்து என்னமா “பீட்ரு” உட்றான் பார்றா என்று சொல்வார்கள்.

அந்த பீட்ரு வார்த்தையை படத் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி, சமீபத்தில் ரிலீஸ் ஆகி பரவலாக பேசப்பட்ட படம் தாதா 87.

கதாநாயகியை திருநங்கையாக காட்டியிருப்பார். சாருஹாசன் தாதாவாக நடித்திருப்பார். இந்த படத்தின் கதையும், திரைக்கதையும் பலராலும் பாராட்டப்பட்டது.

இந்த படத்தையும் அதன் மேக்கிங்கையும் பார்த்து விட்டு இயக்குனர் விஜய்ஸ்ரீயை அழைத்து பேசியிருக்கிறார் நடிகர் அம்சவர்தன்.

அப்போது அவர் படம் பன்னலாம் என்ற வாக்குறுதியை இப்போது செயல்படுத்தினார். என்ற சந்தோஷத்தில் சொன்னதை செய்து காட்டினார் அம்சவர்வன் என்று விஜய் ஸ்ரீ ஜி பெருமிதம்.

இப்போது இந்த கூட்டணி இணைந்து பீட்ரு படத்தை உருவாக்கி வருகிறது.

மாநகரம் இயக்குனரை தொடர்ந்து விஜயை சந்தித்த பிரபல இயக்குனர் – இவருமா?

முழு நீள நகைச்சுவை படமாக உருவாகி வரும் இந்த பீட்ருவில் காமெடி நடிகர்கள் பட்டாளம் அதகளப்படுத்தப் போகிறதாம்.

சத்தமில்லாமல் 15நாட்கள் படப்பிடிப்பு நடத்தி முதல் கட்ட ஷூட்டிங்கை நிறைவு செய்திருக்கிறார்கள். விரைவில் திரையில் பீட்ரு அம்சவர்தனை பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.