Dabang Delhi vs Tamil Thalaivas : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, Pro Kabaddi League

Dabang Delhi vs Tamil Thalaivas :

கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் நேற்று தமிழ் தலைவாஸ் அணியும் டெல்லி அணியும் மோதின.

ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி அணி 30 புள்ளிகளையும், தமிழ் தலைவாஸ் 29 புள்ளிகளையும் எடுத்ததால் ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது.

நடந்த போட்டியில் டெல்லி அணி ரைடுகளில் 13 புள்ளிகளையும், டேக்கில் பாயிண்டில் 9 புள்ளிகளையும், ஆல் அவுட் மூலம் 2 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 6 புள்ளிகளையும் பெற்றது.

அதேபோல் தமிழ் தலைவாஸ் அணி ரைடுகளில் 12 புள்ளிகளையும், டேக்கில் பாயிண்டில் 12 புள்ளிகளையும், ஆல் அவுட் மூலம் 2 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 3 புள்ளிகளையும் பெற்றது.

ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் தமிழ் தலைவாஸ் அணி தோல்வி அடைந்தது தமிழக கபடி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக உள்ளது.

இருப்பினும் அடுத்தடுத்த போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி தனது திறமையை நிரூபித்து அதிக வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.