தனுஷ் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் படத்தின் நாயகி யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

D43 Movie Heroine Update : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக இவரது நடிப்பு பட்டாசு என்னை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன.

அதுமட்டுமல்லாமல் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்த படங்களை தொடர்ந்து தனுஷ் தற்போது பரியேறும் பெருமாள் புல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் கர்ணன் படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

தற்காலிகமாக தனுஷ் 43 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நாயகியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட, தளபதி விஜயுடன் மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மாளவிகா மோகனனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

நடிகர் தனுஷின் பிறந்தநாள் அன்று மாளவிகா மோகனன் தங்களுடன் நடிக்க ஆவலுடன் இருப்பதாக கூறி தனுஷிற்கு வாழ்த்து கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் கார்த்திக் நரேன் கூட்டணியில் உருவாகும் D43 - நாயகி யார் தெரியுமா??
90900