Dhanush 40 Director
தனுஷ் மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்க இருப்பதாகவும் ஹீரோ யார் என்பதும் தெரிய வந்துள்ளது.

D40 Movie Director : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது படு பிஸியாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் 40 படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருந்தன.

தற்போது கிடைத்துள்ள இன்னொரு சூப்பர் தகவல் என்னவென்றால் பா. பாண்டி திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் மீண்டும் இயக்குனராக அவதாரமெடுக்க உள்ளாராம். ஆம் D40 படத்தின் இயக்குனர் தனுஷ் தானாம்.

இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.