மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் இமான்.

D Imman Divorce Her Wife : இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி இமான். பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வரும் இவர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படத்திற்கு இசையமைத்திருந்தார். அதைப்போல் இறுதியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்திற்கும் இவர்தான் இசை அமைத்தார்.

மனைவிடம் இருந்த விவாகரத்து பெற்ற முன்னணி இசையமைப்பாளர்.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருவரும் ஒருமனதாக முடிவு செய்து விவாகரத்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனைவிடம் இருந்த விவாகரத்து பெற்ற முன்னணி இசையமைப்பாளர்.. அவரே வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு

இனி இருவரும் அவரவர் பாதையில் பயணிக்க உள்ளேன். அதற்காக உங்களது ஆதரவு தேவை என கேட்டுக்கொண்டுள்ளார். டி இமான் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.