Cyclone Phethai
Cyclone Phethai

Cyclone Phethai – ஆந்திராவை நோக்கி நகர்ந்து வரும் பெய்ட்டி புயலின் வேகம் அதிகரித்துள்ளதால், சூறைகாற்றுடன் கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னைக்கு அருகில் நிலை கொண்டிருந்த பேய்ட்டி புயல் தற்போது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக இந்திய வானிலை மையம் கூறியவை: “பேய்ட்டி புயலானது மேற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நகர்ந்து வருகிறது.

இந்நிலையில், மணிக்கு 16 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த பெய்ட்டி புயல் தற்போது மணிக்கு 23 கி.மீ., வேகத்தில் வடக்கு திசையில் நகர்ந்து வருகிறது.

தற்போது புயலானது, சென்னைக்கு 320 கி.மீ., தொலைவில் உள்ளது” இவ்வாறு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதை தொடர்ந்து புயலானது,, வடக்கு நோக்கி நகர்ந்து இன்று பிற்பகலில் காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், புயல் கரையை கடப்பதற்கு முன் வலுவிழந்து, கனமழை மற்றும் சூறைகாற்றுடன் கரையை கடக்கும் எனவும் எதிர்பார்க்க படுகிறது; இதனால் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 90 கி.மீ., வீசக்கூடும் என தெரிவித்தனர்.

புயல் கரையை கடக்க உள்ளதால் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் ஒடிசாவில் பரவலாக கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் சென்னையில் புயல் காரணமாக வரலாறு காணாத குளிர் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வானிலை மையம் புயல் குறித்து தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here