குக் வித் கோமாளி ஸ்ருதிகாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சூர்யா நடிப்பில் வெளியான ஸ்ரீ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஸ்ருதிகா. தொடர்ந்து திரை உலகில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் ராசியில்லாத நடிகையாக முத்திரை குத்தப்பட சினிமாவிலிருந்து விலகினார்.

அதன் பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டார். அதோட கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக வெற்றி பெற்று மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போதைய தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் திருமண கோல புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.