CWC Shivangi Record in Instagram

குக்கு வித் கோமாளி பிரபலங்கள் யாரும் செய்யாத சாதனையை சிவாங்கி செய்திருப்பது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியாக்கி உள்ளது.

CWC Shivangi Record in Instagram : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் சிவாங்கி. இதை தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கொக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கிக்கென தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.

மேலும் தற்போது வரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்வோர் எண்ணிக்கை மூன்று மில்லியனை தொட்டுள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாருக்கும் 3 மில்லியன் பாலோயர்கள் இல்லை‌. இதனால் ரசிகர்கள் பலரும் முதல் மரியாதை சிவாங்கி செய்துள்ள இந்த சாதனைக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.