CWC Shivangi Childhood Photo

ஷிவாங்கியின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

CWC Shivangi Childhood Photo : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிவாங்கி. பாடகியாக இனிய குரலை பெற்றிருந்தாலும் பேசும் போது குழந்தை போல பேசுவதால் பலரும் இவரை கிண்டல் செய்தனர்‌.

ஆனால் தற்போது ஷிவாங்கியின் அந்த குழந்தை தனமான பேச்சு தான் அவருக்கு பெரிய பலம். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று அனைத்து ரசிகர்கள் மனதிலும் தனி இடம் பிடித்துள்ளார்.

தற்போது இவருடைய குழந்தை பருவ புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அப்பவும் இப்பவும் ஷிவாங்கி ஒரே மாதிரி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.