CWC Shivangi About Ashwin

அஸ்வின் குறித்து சிவாங்கி பேட்டி ஒன்றில் ஓப்பனாக கூறியுள்ளார்.

CWC Shivangi About Ashwin : தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதுவரை இரண்டு சீசன்களில் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் மூன்றாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற அஸ்வின் மற்றும் கோமாளியாக பங்கேற்ற சிவானி இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இவர்களது காம்போவிற்கு தற்போது மிகப்பெரிய ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது ஷிவாங்கி அளித்துள்ள பேட்டி ஒன்றில் அஸ்வின் குறித்து பேசியுள்ளார். அஸ்வினை முதல் முறை செட்டில் பார்த்ததுமே இவ்வளவு அழகான பையன் சமைக்க வந்திருக்கான்னே என்று தான் தோணியது. செட்டுல ரொம்பவே டெடிகேட் ஆன ஆளு. என்னுடைய வளர்ச்சியை பார்த்து அவரும் அவருடைய வளர்ச்சியை பார்த்து நானும் மகிழ்ச்சி கொண்டோம் என தெரிவித்துள்ளார்.