CWC Pavithra Love Proposal to Fans

ஐ லவ் யூ என கூறி இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு அனைவருக்கும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளார் குக் வித் கோமாளி பவித்ரா.

CWC Pavithra Love Proposal to Fans : தமிழில் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பவித்ரா லட்சுமி. மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்றார். சில வாரங்களுக்கு முன்னர்தான் இவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து எவிக்ட் ஆனார்.

இந்த வாரம் கிராண்ட் பினாலே என்பதால் மீண்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். மேலும் சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஏப்ரல் 1ஆம் தேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டு ஐலவ்யூ எனக்கூறி Happy April Fools என தெரிவித்துள்ளார்.